ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார் தேஜ கூட்டணியில் அமமுக தொடர்கிறது: டிடிவி.தினகரன் பேட்டி

23 hours ago 3

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஆஞ்சியோகிராம் பரிசோதனை முடிவுகள் எனது இதயம் பலமாக இருப்பதை உறுதி செய்துள்ளது. நலமுடன் உள்ளேன். இன்னும் 30 ஆண்டுகளாவது நாங்கள் மோடி அணியில் இருக்கிறோம். தேஜ கூட்டணியில் உள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒரே குறிக்கோளோடு செயல்படுகிறோம். இந்த தருணத்தில் தேஜ கூட்டணியில்தான் அமமுக தொடர்கிறது. அதிமுக கூட்டணிக்கு வந்ததால் அமமுக என்னவாகும், ஓபிஎஸ் கைவிடப்பட்டாரா என்பது எல்லாம் வெறும் ஊகங்கள். ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார். நாங்கள் எல்லோரும் மோடியின் கரங்களை வலுப்படுத்த அந்த கூட்டணிக்குச் சென்றோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம். ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பில்லை. அது ஏற்பட சிலருக்கு பரந்த மனநிலை இல்லை. ஆகையால் ஓரணியில் திரள வேண்டும் என்றே சொல்லி வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார் தேஜ கூட்டணியில் அமமுக தொடர்கிறது: டிடிவி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article