ஓடும் ரெயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி விழுந்த நர்சிங் மாணவி - அதிர்ச்சி வீடியோ

2 months ago 13

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கன்னூர் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 8 மணியளவில் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

அப்போது அந்த ரெயிலில் பயணம் செய்த நர்சிங் கல்லூரி மாணவி தனக்கு தேவையான பொருட்களை வாங்க ரெயிலில் இருந்து இறங்கி அங்கு உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

அந்த மாணவி ரெயில் நிலையத்தில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது திடீரென ரெயில் புறப்பட்டது. இதனால், அந்த மாணவி வேகமாக சென்று ஓடும் ரெயிலில் ஏற முயற்சித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் படியில் இருந்து தவறி விழுந்த மாணவி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள பாதையில் தவறி விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். ரெயில் நின்ற உடன் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி பார்த்துள்ளனர். அப்போது, மாணவி ரெயில் தண்டவாளத்தில் சிறு காயங்களுடன் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை மீட்ட ரெயில்வே போலீசார் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


LIVE : ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி விழுந்த நர்சிங் மாணவி https://t.co/DTbGK8i8Zh

— Thanthi TV (@ThanthiTV) November 3, 2024


Read Entire Article