
சேலம்,
சேலம் கன்னங்குறிச்சி அருகேயுள்ள சின்னகொல்லப்பட்டி அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் மாது. இவருடைய மனைவி மாணிக்கம் (வயது 60). இவர் சேலம் அழகாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கிளினிக்கில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 28-ந் தேதி கொண்டப்ப நாயக்கன்பட்டியில் உள்ள பொதுத்துறை வங்கிக்கு சென்று, தான் அடகு வைத்திருந்த 6 பவுன் நகையை மீட்டுள்ளார். மறுநாள் சூரமங்கலம் ஜங்ஷன் மெயின்ரோட்டில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி 5 ரோட்டிற்கு சென்றார். அப்போது அவர் வைத்திருந்த சிறிய பையில் இருந்த 6 பவுன் நகையை ஓடும் பஸ்சில் மர்ம நபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.