'ஓஜி சம்பவம்' பாடல் குறித்து ஹிண்ட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

3 hours ago 2

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

கடந்த 28-ம் தேதி வெளியான இப்படத்தின் டீசர், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்தது. அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் 'ஓஜி சம்பவம்' பாடல் வருகிற 18-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 'ஓஜி சம்பவம்' பாடல் குறித்து ஜி.வி.பிரகாஷ் ஹிண்ட் கொடுத்திருக்கிறார். 

A high voltage ⚡️ELEVATION ⚡️track for the man of the masses #OGSambavam from March 18th .

— G.V.Prakash Kumar (@gvprakash) March 14, 2025
Read Entire Article