ஓசூரில் எம்எல்ஏவிடம் நிர்வாகிகள் வாழ்த்து

1 month ago 6

ஓசூர், நவ.19: ஓசூர் மாநகர திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைக்கு புதிய தலைவராக பொன்ராம் சத்யா, துணைத் தலைவராக சரவணன், அமைப்பாளராக சேகர், துணை அமைப்பாளர்களாக கணேசன், பசவராஜன், சைனு, சந்திரன், முகம்மது நியாஸ், அருளின் மகிமைதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான சத்யா, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாறன், பகுதி செயலாளர்களான துணை மேயர் ஆனந்தய்யா, வெங்கடேஷ், ராமு, திம்மராஜ், மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.

The post ஓசூரில் எம்எல்ஏவிடம் நிர்வாகிகள் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article