
'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் மாதவன். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கோலிவுட் முதல் பாலிவுட் வரை பட்டையை கிளப்பி தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆப் ஜெய்சா கோய்' .
இதில் 'தங்கல்'' பட நடிகை பாத்திமா சனா ஷேக் கதாநாயகியாக நடித்துள்ளார். விவேக் சோனி இயக்கி இருக்கும் இப்படத்தை கரண் ஜோஹர், ஆதார் பூனாவல்லா, அபூர்வா மேத்தா மற்றும் சோமன் மிஸ்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமாக காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ஆப் ஜெய்சா கோய்' படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.