
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா. மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜுன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இவர் ஜெய் ஜோஸ் ராஜ் இயக்கிய 'ஆனந்தபுரம் டைரிஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இது நடிகை மீனாவின் முதல் மலையாள படமாகும். இப்படத்தில் மனோஜ் கே. ஜெயன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கான கதையை எழுதியவர் சசி கோபாலன் நாயர்.
இப்படம் எதிர்பாராத சூழ்நிலையால் இரண்டு முறை சட்டப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் சட்டக்கல்லூரிக்குத் திரும்பிய ஒரு நடுத்தர வயது பெண்ணின் கதையை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.
தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 4-ந் தேதி மனோராமா மேக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
