
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் 90-களில் பல தொடர்களில் நடித்திருக்கிறார். சிறுவர்கள் விரும்பிய தொடரான, மை டியர் பூதம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ். நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பார். இப்படத்தில் நிவேதாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. ஜெய் நடித்த 'நவீன சரஸ்வதி சபதம்' படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். '35 சின்ன விஷயம் இல்ல' என்ற இப்படத்தினை சுரேஷ் புரடக்ஷன்ஸ் உடன் மற்ற 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க நந்த கிஷோர் ஏமானி இயக்கியுள்ளார். இப்படத்தில் நிவேதா நாயகியாக நடிக்க, விஷ்வதேவ், பிரியதர்ஷி புலிகொண்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நடிகர் ராணா டகுபதி இந்தப் படத்தினை வெளியிட்டுள்ளார். கௌதமி, பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படம் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. படம் ஆஹா ஓ.டி.டியில் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது.