ஓ.டி.டி தள டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள 'சூர்யாவின் சனிக்கிழமை'

2 months ago 22

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

டிவிவி நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. வெளியான முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ.25 கோடி வசூலித்து அசத்தியது. இப்படம் தற்போது வரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் கடந்த 26-ந் தேதி வெளியானது. தற்போது இந்த படம் ஓ.டி.டி தளத்தில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அதாவது இந்திய அளவில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது குறித்த பதிவை நடிகர் நானி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article