ஒரே மாதத்தில் 1,000 கடல் ஆமைகள் இறப்பு: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி

1 week ago 3

சென்னை: “ஒரு மாதத்தில் 1000 கடல் ஆமைகள் இறந்துள்ளன. தஞ்சம் தேடி வரும் அரிய உயிரினங்களைக் காக்கும் கடமை தமிழக அரசுக்கு இல்லையா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் வடக்கு எல்லையான பழவேற்காட்டில் தொடங்கி முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் கல்பாக்கம் வரையிலான வங்கக் கடற்கரையில் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்காக உலகின் பல நாடுகளில் இருந்த வந்த ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவை கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்திருக்கின்றன என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

Read Entire Article