ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது யுஜிசி

3 hours ago 2

டெல்லி: ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள் படிப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டது. இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; உயா் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளை பயில்வது தொடா்பாக யுஜிசி சாா்பில் அண்மையில் நடைபெற்ற 589-ஆவது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் ஜூன் 5 முதல் நடைமுறைக்கு வந்தன.

யுஜிசி அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயிற்றுவிக்க முடியும். ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இருவேறு பட்டம், பட்டயப்படிப்புகளை நேரடியாக படிக்க முடியும். இருவேறு படிப்பு வகுப்புகளும் ஒரே நேரத்தில் இல்லாதபடி, பல்கலைக்கழகங்கள் பார்த்துகொள்ள வேண்டும். ஒரு படிப்பை நேரடியாகவும் மற்றொரு படிப்பை தொலைநிலைக் கல்வி அல்லது ஆன்லைன் மூலமும் படிக்கலாம். பி.எச்டி. தவிர்த்து பிற படிப்புகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது யுஜிசி appeared first on Dinakaran.

Read Entire Article