ஒரே நாளில் பத்திரப்பதிவு மூலம் ரூ.272.82 கோடி வருவாய்: பதிவுத் துறை தகவல்

12 hours ago 4

சென்னை: இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் பத்திரப்பதிவு மூலம் ரூ.272.82 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. மங்களகரமான நாளான ஏப்.30ம் தேதி (புதன்கிழமை) அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.

பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று ஏப்.30ம் தேதி அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.

 

The post ஒரே நாளில் பத்திரப்பதிவு மூலம் ரூ.272.82 கோடி வருவாய்: பதிவுத் துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article