ஒரே நாளில் 3 சிறுவர்களைக் கடித்துக் குதறிய தெரு நாய்கள்

6 months ago 51
சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டி கிராமத்தில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த திதிஷா என்ற 7 வயது சிறுமியின் வாய் மற்றும் கைகளை தெரு நாய் ஒன்று கடித்துக் குதறியதாகக் கூறப்படுகிறது. பின்னர்,அதே நாய் பிள்ளையார் பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரண்டரை வயதுடைய அழகர் என்ற ஆண் குழந்தையின் கையில் பலமாக கடித்த நிலையில் இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பெற்றோர் தெரிவித்தனர். இதே போல திருப்பத்தூர் தென்மாபட்டு பகுதியை சேர்ந்த ரித்தீஷ் என்ற 9 வயது சிறுவனை அவனது வீட்டு அருகில் இருந்த நாய் கடித்ததால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
Read Entire Article