ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது- காங்கிரஸ்

2 months ago 15

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நர்மதை நதிக்கரையில் அவரின் உருவச்சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.அங்கு பேசிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தலை நோக்கி நாங்கள் இப்போது செயல்பட்டு வருகிறோம். முன்பு நாடு முழுக்க வேறு வேறு வரி செலுத்தும் முறைகள் இருந்தன. ஆனால், பாஜக தலைமையிலான பாஜக அரசுஒரே நாடு ஒரே வரி என்ற முறையில் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது" என்று கூறினார்.

மோடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது என்றார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-"பிரதமர் மோடி அவர் சொல்வதை செய்ய மாட்டார். ஏனென்றால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைவரின் கருத்தும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.அந்த வகையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது சாத்தியமற்றது" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article