ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்த்த ஹாரி புரூக்

3 months ago 25

பிரிஸ்டல்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், அடுத்த 2 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் டக்கெட் 91 பந்துகளில் 107 ரன்களும், ஹாரி புரூக் 72 ரன்களும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 310 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் பொறுப்பு கேப்டனான ஹாரி புரூக் 312 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு தரப்பு தொடர்களில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1.ஹாரி புரூக் - 312 ரன்கள்

2. விராட் கோலி - 310 ரன்கள்

3. மகேந்திரசிங் தோனி - 285 ரன்கள்

Read Entire Article