ஒரு பாண்ட்யாதான் வெற்றி பெற முடியும் - மும்பைக்கு எதிரான வெற்றிக்குப்பின் குருனால்

1 week ago 4

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 67 ரன்களும், ரஜத் படிதார் 64 ரன்களும் அடித்தனர். மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 222 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 209 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் திலக் வர்மா 56 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்த பின் குருனால் பாண்ட்யா அளித்த பேட்டியில், "இந்த போட்டியில் ஒரே ஒரு பாண்ட்யாதான் வெற்றி பெற முடியும் என்பதை நாங்கள் (ஹர்திக் பாண்ட்யா குறித்து) அறிந்திருந்தோம். அந்த வகையில் நான் எனது அணியின் வெற்றியை முக்கியமாக கருதுகிறேன்.

எனக்கும் ஹர்திக்கிற்கும் இடையே உள்ள அன்பும் பாசமும் மிகவும் இயல்பானது. ஹர்திக் பாண்ட்யா மிகச்சிறப்பாக விளையாடினார். அவரை நினைத்தால் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு பந்து வீச்சாளராக, நீங்கள் 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் இருப்பது முக்கியம்.

மும்பை வான்கடே மைதானத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடியுள்ளேன். இங்கு எப்படி பந்து வீசினால் சரியாக இருக்கும் என்பதை அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டேன். அதை வைத்துதான் இன்று பந்து வீசினேன். அதேபோன்று ஆன்டி பிளவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். அவருடைய அறிவுரைகளும் என்னை சிறப்பாக வழி நடத்துகிறது. நாங்கள் ஒரு அணியாக நல்ல நிலையில் இருக்கிறோம்" என்று கூறினார்.

Read Entire Article