ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜய் எந்த அனுபவத்தில் குறை சொல்கிறார்? பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்

4 months ago 14

மதுரை: பாஜ மாவட்ட தேர்தல் குழு பயிலரங்கம் மதுரையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஒரு தேர்தலையும் சந்திக்காத நடிகர் விஜய் எந்த அனுபவத்தின் அடிப்படையில் இதனை கூறுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளும், அரசும் பல கோடி ரூபாய் செலவு செய்கின்றனர். இதனை குறைக்க வேண்டியது அரசியல் கட்சி மற்றும் மக்களின் கடமை.

நடிகர் விஜய்யின் தீர்மானம் தவறானது. தவெக ஆட்சி அமைத்தால் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனத்தெரிவித்துள்ளது. மக்களிடையே இதற்கு எந்த வரவேற்பும் இருக்காது. அரசியல் கட்சிகள் மத்தியில் வரவேற்பை பெறலாம். கூட்டணியில் இருந்தால் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுக்க வேண்டும். பாஜ அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியிலும் பங்கு என்பதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.

The post ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜய் எந்த அனுபவத்தில் குறை சொல்கிறார்? பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article