ஒரு டிரில்லியன் டாலர் லட்சிய இலக்கை அடைய சுற்றுலாத்துறையின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரன் பேச்சு

3 months ago 22

சென்னை: சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், தமிழ்நாட்டில் அதிக அளவில் சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் என்ற லட்சிய இலக்கினை அடைய, சுற்றுலாத்துறையின் பங்களிப்பு முதன்மையாக இருக்கும் வகையில் பணியாற்றிடுவோம்” என்று கூறினார். ஆய்வுக்கூட்டத்தில் செயலாளர் சந்தரமோகன், இயக்குநர் சமயமூர்த்தி, துணைச் செயலாளர் வீருசாமி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, சுற்றுலாத்துறை இணை இயக்குநர் புஷ்பராஜ் உள்பட சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒரு டிரில்லியன் டாலர் லட்சிய இலக்கை அடைய சுற்றுலாத்துறையின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article