'ஒன்ஸ் மோர்' படத்தின் 'வா கண்ணம்மா' பாடல் வெளியானது

3 hours ago 3

சென்னை,

தமிழில் 'மாஸ்டர், கைதி, விக்ரம்' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அர்ஜுன் தாஸ். இவர் 'அநீதி, ரசவாதி, போர்' போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். 'குட் நைட் ' மற்றும் 'லவ்வர்' திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இந்த படத்திற்கு 'ஒன்ஸ் மோர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

ரொமான்டிக் காதல் கதைகளத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஹேசம் அப்துல் வாகப் இசையமைத்திருக்கிறார். அரவிந்த விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து 'வா கண்ணம்மா' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலுக்கான வரிகளை இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ளார். பாடலை ஹெஷாம் அப்துல் வஹாப், உத்தாரா உன்னி கிருஷ்ணன் ஆகியோர்  பாடியுள்ளனர்.

THE WAIT IS OVER Most awaited track 'Vaa Kannamma' from #OnceMore is here to rule all the charts and hearts ❤️Watch here: https://t.co/cMnCP60jeUWritten & directed by @isrikanthmv ✨A @heshamawmusic musical @iam_arjundas @AditiShankarofl @editorNashpic.twitter.com/0FHaiwCWv9

— Think Music (@thinkmusicindia) January 10, 2025
Read Entire Article