சென்னை: ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம் என விஜயின் அறிக்கைக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; “கேஸ் விலை ஏற்றத்துக்கு விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்; அதில் விஞ்ஞானப்பூர்வமாக ஏதாவது இருக்கிறதா? Demonetization மூலம் கருப்பு பணத்தை பிரதமர் ஒழித்தாரே, அப்படி திரைத்துறையில் Black டிக்கெட் ஒழிக்கப்பட்டதா? அதை கட்டுப்படுத்தினீர்களா நீங்கள்?
சினிமாவில் Black-ல் டிக்கெட் விற்றீர்கள், சினிமா டிக்கெட் விலையை உயர்த்தினீர்கள், உள்ளே பாப்கார்னை கூட உயர்த்திதான் விற்றீர்கள்…” விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன? ‘பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன்’ என இருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்? உங்களுக்கு லாபமென்றால் பேசமாட்டீர்களா? ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும்; அரசியலோ பொருளாதாரமோ தெரியாது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்; கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதை திரும்பப்பெறுமாறு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவிருக்கிறோம். சர்வதேச சந்தையில் 60 சதவிகிதத்துக்கு மேல் கேஸ் விலை ஏற்றம் செய்யப்பட்டதால், இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளது; அதோடு ஒப்பிடுகையில் இந்த கேஸ் விலையேற்றம் மிக மிக குறைவானதே. இருப்பினும் விலையை குறைக்க வலியுறுத்துவோம் என்று கூறினார்.
The post ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி appeared first on Dinakaran.