ஒன்றிய தொல்லியல்துறைக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்

3 months ago 24

மதுரை: ஒன்றிய தொல்லியல்துறைக்கு ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. பழமை வாய்ந்த கோயில்களை பாதுகாப்பதில் ஒன்றிய தொல்லியல்துறை அக்கறை காட்டுவதில்லை என்று ஒன்றிய தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள இந்திரன் சன்னதியை பராமரித்து ஆராதனை செய்து வழிபட நடவடிக்கை கோரி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஒன்றிய தொல்லியல்துறைக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஒன்றிய தொல்லியல்துறை கல்லறைகளை பாதுகாக்கவே உள்ளதாக தெரிகிறது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை பாதுகாப்பது தொல்லியல்துறையின் கடமை. அரியலூர்-தஞ்சை சாலையில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கத்தால் ஏராளமான கனரக வாகனங்கள் கோயில் பகுதியை கடந்து செலகின்றன. வருங்கலத்தில் கோயிலின் நிலை என்னவாகும் என யோசிக்கவில்லை என்று நீதிபதிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒன்றிய தொல்லியல்துறை, கோவில் நிர்வகம் மற்றும் அரசு பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

The post ஒன்றிய தொல்லியல்துறைக்கு ஐகோர்ட் கிளை கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article