சென்னை: ஒன்றிய அரசை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக கூட்டணி கட்சிகள்
ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக, காங்கிரஸ், தி.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. முஸ்லிம் லீக், மநீம, மமக, கொமதேக, த.வா.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, செல்வப்பெருந்தகை, வைகோ, பெ.சண்முகம், முத்தரசன், காதர் மொகிதீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.