ஆறுமுகநேரி,நவ.16: தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆறுமுகநேரி மெயின் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில ஒழுங்கு நடவடிக்கைகள் குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், தெற்கு மாவட்ட பொருளாளர் காயல் அமானுல்லா, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மீனவர் பிரச்னையில் பாராமுகமாக ஒன்றிய அரசு இருந்து வருவதாகவும், ஆறுமுகநேரி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கவும், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் பயணிகள் பயன்படுத்தும் வகையில் புதிய ரயில் இயக்கவும், திருச்செந்தூர். கோவை மற்றும் பெங்களூருக்கு புதிய ரயில்களை இயக்கவும் காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையின் உயரத்தை உயர்த்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆறுமுகநேரி நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
The post ஒன்றிய அரசை கண்டித்து ஆறுமுகநேரியில் மதிமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.