ஒன்றிய அரசை கண்டித்து 13ம் தேதி உருவபொம்மை எரித்து போராட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

3 hours ago 2

மைசூரு: தேசிய விவசாயிகளின் தலைவர் ஜெகஜித் சிங் தல்லேவாலாவின் போராட்டத்தை அலட்சியப்படுத்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 13ம் தேதி பிரதமர், ஒன்றிய வேளாண் அமைச்சரின் உருவபொம்மைகள் எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என மாநில விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் குருபூர் சாந்தகுமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘டெல்லியின் எல்லையில் என்ன கனூரில் ஜெகஜித்சிங் தல்லேவாலா கடந்த 45 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால், ஒன்றிய அரசு அலட்சிய போக்கை கடைபிடித்து வருகிறது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் பிரதமர் மற்றும் வேளாண் அமைச்சரின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தப்படும்.

ஜன. 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கிராமங்களில் தாலுகா அளவில் தீப்பந்த போராட்டம் மூலம் பிரதமரின் உருவ பொம்மை எரிக்கப்படும். ஜன. 26ம் தேதி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கவும், எம்எஸ்பி கேரன்டி சட்டம் அமல், விவசாயிகளின் கடன் தொகை ரத்து, எம்.எஸ். சாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வலியுறுத்தி தாலுகா, மாவட்ட கிராம மையங்களில் டிராக்டர் ஊர்வலம் நடத்தப்படும். இதன் மூலம் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். நாட்டில் விவசாயிகளின் பலத்தை காண்பிக்க வேண்டும். நாட்டின் விவசாயிகளின் நலனுக்காக தனது உயிரை தியாகம் செய்து வரும் தல்லேவாலாவுக்கு ஆதரவாக நாம் அனைவரும் நிற்க வேண்டும்’ என்றார்.

The post ஒன்றிய அரசை கண்டித்து 13ம் தேதி உருவபொம்மை எரித்து போராட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article