சென்னை: ரயில்வே பட்ஜெட், பிங்க் புத்தகத்தை ஒழித்தார்கள்; தற்போது திட்ட விவரத்தையும் ஒழித்துவிட்டனர் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; தமிழ்நாட்டு பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் உள்ள 4 திட்டங்களை மீண்டும் சர்வே பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். திட்ட மதிப்பு, இதுவரை ஆன செலவு, இந்தாண்டு ஒதுக்கீடு விவரங்கள் யாருக்கும் தரப்படவில்லை. புள்ளிவிவரங்களை மறைப்பது என்பது குற்றம் மட்டுமல்ல; குற்றத்தை மறைக்கும் உச்சபட்ச அநீதி. ரயில்வே திட்ட ஒதுக்கீட்டு விவரங்களை தராமல் மக்களை அறியாமைக்குள் தள்ளும் ஒன்றிய அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!! appeared first on Dinakaran.