ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் சர்வேயர், ஓவர்மேன்

4 hours ago 1

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான THDC India Limited நிறுவனத்தில் சர்வேயர், ஓவர்மேன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Junior Mine Surveyor (Grade-I): 1 இடம். வயது: 36க்குள். சம்பளம்: ரூ.29,600-1,19,500. தகுதி: Mine Survey/Mine Engineering/Mining & Mine Surveying/Civil Engineering பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியும், சர்வேயர்ஸ் சான்றிதழும், 9 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Junior Mine Surveyor (Grade- II): 2 இடங்கள். வயது: 32க்குள். சம்பளம்: ரூ.29,400- 1,19,200. தகுதி: Mine Survey/Mine Engineering/Mining & Mine Surveying/Civil Engineering பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியும், சர்வேயர் சான்றிதழும், 9 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
3. Junior Overman (Grade-I): 2 இடங்கள். வயது: 36க்குள். சம்பளம்: ரூ.29,600-1,19,500. தகுதி: Mining Engineering ல் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியும், ஓவர்மேன்ஸ் சான்றிதழும் 9 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
4. Junior Overman (Grade-II): 3 இடங்கள். வயது: 32க்குள். சம்பளம்: ரூ.29,400- 1,19,200. தகுதி: Mining Engineering ல் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியும், ஓவர்மேன்ஸ் சான்றிதழும், 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களில் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சிபிடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

https://thdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.03.2025.

The post ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் சர்வேயர், ஓவர்மேன் appeared first on Dinakaran.

Read Entire Article