ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 129 இடங்கள்

4 hours ago 1

பணியிடங்கள் விவரம்

1. Engineer
i) Civil: 30 இடங்கள்.
ii) Electrical: 25 இடங்கள்.
iii) Mechanical: 20 இடங்கள்
iv) Geology & Geo Technical: 7 இடங்கள்
v) Environment: 8 இடங்கள்.
vi) Mining: 7 இடங்கள்.
vii) Wind Power Projects: 2 இடங்கள்

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 30க்குள். சம்பளம்: ரூ.50,000-1,60,000.
தகுதி: பொறியியல் பிரிவுக்கு சிவில் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் (பவர்)/ எலக்ட்ரிக்கல்/ பவர் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன்/மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங்/ என்விரோன்மென்ட் இன்ஜினியரிங்/ இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல்/மைனிங் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பிடெக் தேர்ச்சி. இதர பிரிவுகளுக்கு ஜியாலஜி/அப்ளைடு ஜியாலஜி/ ஜியாலஜிக்கல் டெக்னாலஜி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

2. Executive
i) Human Resource: 15 இடங்கள். தகுதி: பெர்சனல் மேனேஜ்மென்ட்/ஐஆர்/லேபர் வெல்பேர் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் எம்பிஏ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சோஷியல் வொர்க்/ஹெச் ஆர் பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) Finance: 15 இடங்கள். தகுதி: சிஏ/சிஎம்ஏ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 30க்குள். சம்பளம்: ரூ.50,000-1,60,000.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, சிபிடி தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.600/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

https://www.thdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.03.2025.

The post ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 129 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article