நாகப்பட்டினம்,பிப்.22: நாகப்பட்டினம் நகர திமுக சார்பில் ஒன்றிய அரசின் இந்திமொழி திணிப்பை எதிர்த்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி நாகப்பட்டினத்தில் பிரசாரம் நடந்தது. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான கவுதமன் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை திமுகவினர் கையில் ஏந்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஆட்டோவில் ஒட்டி விழிப்புணர்வு இந்தி மொழி ஒழிப்பு பிரசாரம் செய்தனர். நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய அரசின் இந்திமொழி திணிப்பை எதிர்த்து திமுகவினர் விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.