ஒட்டன்சத்திரம், ஜன. 18: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மார்க்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2001- 2002 கல்வி ஆண்டுகளில் பிளஸ்- 2 படித்த முன்னாள் மாணவர்கள் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் அருணா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொண்டு பள்ளியின் பழமையான நினைவுகள், தற்கால நிகழ்வுகளை பரிமாறி நெகிழ்ந்து கொண்டனர்.
தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் குழந்தைகளை தாங்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு அழைத்து சென்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.பின்னர் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி வளர்ச்சி நிதியாக சேகரித்து வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அனைவரும் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். முடிவில் கேக் வெட்டி கொண்டிடாடிய பின் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.ஏற்பாடுகளை முன்னாள் மாணவ, மாணவிகள் செய்து இருந்தனர்.
The post ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.