பழநி, ஜன. 18: ஒட்டன்சத்திரம் பகுதியில் கண்வலி கிழங்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் அருகே மார்க்கம்பட்டி, எல்லப்பட்டி, சின்னக்காம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கண்வலி கிழங்கு செடி பயிரிடப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இப்பயிருக்கு மேலை நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
இப்பகுதி விவசாயிகளால் டன் கணக்கில் கண்வலி கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டும் உரிய விலை கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே, மார்க்கம்பட்டி அல்லது ஒட்டன்சத்திரம் பகுதியில் கண்வலி கிழங்கு கொள்முதல் நிலையம் அமைத்து அரசே உரிய விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். இவ்வாறு கூறினர்.
The post ஒட்டன்சத்திரம் பகுதியில் கண்வலி கிழங்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.