ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு: ரூ.25க்கு விற்ற ஒரு கிலோ முருங்கை ரூ.60வரை விற்பனை

10 hours ago 2

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை இருமடங்கு வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளன. ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள சத்திரப்பட்டி, விருப்பாச்சி, தேவத்தூர், கொத்தையம், அம்புலிகை, கல்லிமைந்தையம் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை காய்கள் சாகுபடி செய்யப்படும்.

சாகுபடி செய்யப்படும் முருங்கை காய்கள் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் பெய்த மழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு முருங்கை வரத்து முற்றிலுமாக குறைந்தது. இதன் காரணமாக முருங்கை விலை இருமடங்கு வரை உயர்ந்துள்ளது.

The post ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு: ரூ.25க்கு விற்ற ஒரு கிலோ முருங்கை ரூ.60வரை விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article