ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு வெண்டை வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் காய்கறி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான இடையகோட்டை, கள்ளிமந்தையம், ஸ்ரீராமபுரம், புதுச்சத்திரம், அம்பிளிக்கை, விருப்பாட்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாயிகள் வெண்டைக்காய் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
இதனால் சந்தைக்கு வெண்டை வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சென்ற மாதங்களில் ஒரு கிலோ வெண்டை ரூ.35 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.12 முதல் ரூ.10 வரை சரிந்துவிட்டது. போதிய விலை கிடைக்காததால் வேதனை அடைந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
The post ஒட்டன்சத்திரம் சந்தைக்கு வெண்டை வரத்து அதிகரிப்பு: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.