ஒட்டன்சத்திரம், ஜன. 5: ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் வாசுகி துவக்கி வைத்தார். வணிகவியல் துறை தலைவர் யமுனாதேவி வரவேற்றார். வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்த காவியா, கார்த்திகா ஆகியோர் மாதவிடாய் காலத்தில் எடுத்து கொள்ளும் உணவு முறை, மாணவிகள் உடலை தூய்மையாக வைத்து கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியை மஞ்சு நன்றி கூறினார்.
The post ஒட்டன்சத்திரம் கல்லூரியில் சுகாதார மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு appeared first on Dinakaran.