ஒடிசா வாலிபரிடம் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

1 hour ago 1

 

திருப்பூர், நவ.19: திருப்பூர், தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது புதூர் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு 1 கிலோ100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு தங்கியிருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதாப் செட்டி (42)என்பதும், அவர் ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதாப் செட்டியை கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1கிலோ100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

The post ஒடிசா வாலிபரிடம் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article