ஒடிசா: ஊழல் செய்த 120 அதிகாரிகள் பணி நீக்கம்; 39 பேருக்கு கட்டாய ஓய்வு

4 days ago 2

புவனேஸ்வர்,

ஒடிசா சட்டசபையில் பிஜு ஜனதா தள உறுப்பினர் துருபா சரண் சாஹூவின் எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றுக்கு, முதல்-மந்திரி மோகன் சரண் மஜ்ஜி பதிலளித்து இன்று கூறும்போது, 2020 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் ஊழல் செய்த மற்றும் சட்டவிரோத வகையில் சொத்துகளை வாங்கியவர்கள் என மொத்தத்தில் 120 அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என கூறினார்.

அவர்களிடம் இருந்து ரூ.59.47 கோடி பணமும் கைப்பற்றப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதில் அதிக அளவாக, 2023-ம் ஆண்டில் 31 அதிகாரிகளும், 2024-ம் ஆண்டில் 30 அதிகாரிகளும், 2020-ம் ஆண்டில் 27 அதிகாரிகளும் மற்றும் 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டாண்டுகளில் தலா 16 அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதேபோன்று, 2021-ம் ஆண்டில் 23 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. 2022-ம் ஆண்டில் 13 பேருக்கும், 2020, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருவருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Read Entire Article