ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

4 months ago 25

தர்மபுரி,

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்துள்ளனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

Read Entire Article