ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

2 months ago 11

தருமபுரி /மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6,500 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,236 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,084 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 106.19 அடியாகவும், நீர் இருப்பு 73.09 டிஎம்சியாகவும் இருந்தது.

Read Entire Article