
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்ட திட்டத்தை நிறைவேற்ற அரசு ஆவண செய்யுமா என்று எம்.எல்.ஏ. ஜிகே மணி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
இந்த திட்டத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜெயிக்கா நிறுவனம் இந்த திட்டத்திற்கு ஜூன் 25-ம் தேதிக்குள் ஒப்புதல் அளிப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இரண்டாம் கட்ட திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.