ஐமேக்ஸ் திரையில் முதல்முறையாக வெளியாகும் மலையாள படம் : எல் 2 எம்புரான்

6 hours ago 3

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படம் வருகிற 27-ந் தேதி உலகளவில் ஐமேக்ஸ் திரையில் வெளியாக உள்ளது. இந்த படம் தான் மலையாள சினிமாவில் முறையாக ஐமேக்ஸ் திரையில் வெளியாக படமாகும். இது குறித்த பதிவை நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "எல் 2 எம்புரான் மலையாளத் திரையுலகில் இருந்து ஐமேகஸ்-ல் வெளியாகும் முதல் திரைப்படமாக இருக்கும் என்பதை அறிவிப்பதில் எங்களுக்குப் பெருமிதம். இது ஐமேக்ஸ் மற்றும் மலையாள சினிமா இடையே ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற தொடர்பின் தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

It gives us immense pride to announce that #L2E #Empuraan will be the first ever film from the Malayalam cinema industry to release on IMAX. We hope this is the beginning of a long and illustrious association between IMAX and Malayalam Cinema. Watch the spectacle unfold on IMAX… pic.twitter.com/yTyHCyietU

— Mohanlal (@Mohanlal) March 18, 2025
Read Entire Article