ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்

2 months ago 14

தஞ்சாவூர்: ஆயிரம் கிலோ அன்னம், 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிவாலயங்களில் சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அதன்படி இன்று வெள்ளிக்கிழமை ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதேபோல் உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்களால் வழங்கிய ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாலை நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படும். அன்னாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் சீரும்சிறப்புமாக செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி பெருவுடையாரை தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அன்னதரிசனம் காண்பவர்கள் அன்னதோஷத்திலிருந்து விடுபடலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.

The post ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Read Entire Article