டெல்லி: 18வது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 22ம்தேதி தொடங்க உள்ளது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சீசனில் டெல்லி கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பன்ட்டைஇந்த முறை லக்னோ ஏலத்தில் எடுத்துக்கொண்டது. இதேபோல் லக்னோ கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கும், ஆர்பிசி கேப்டனாக செயல்பட்ட டூபிளிசை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கும் டெல்லி ஏலத்தில் எடுத்தது. இவை தவிர அக்சர் பட்டேல் ரூ. 16.50 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். இதில் கே.எல்.ராகுல், அக்சர் பட்டேல் இடையே கேப்டன் பதவிக்கு கடும் போட்டி உள்ளது.
ராகுல், பஞ்சாப், லக்னோ அணிகளின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அக்சர் பட்டேல் இந்திய டி.20 அணியின் துணை கேப்டனாக அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நியமிக்கப்பட்டார். டெல்லி கேப்டன் பதவி வாய்ப்பு பற்றி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், டெல்லி அணிக்கு 3 வாய்ப்புகள் இருப்பதாக (கே.எல்.ராகுல், அக்சர்பட்டேல், டூபிளசிஸ்) நான் உணர்கிறேன். அக்சர் பட்டேல் வளர்ந்துவரும் வீரர். இந்திய அணியில் ஒருநாள்போட்டியில் முக்கிய வீரராக உள்ளார். எனவே அவர் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார். ஆனால் ராகுலும் இந்தியா, லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கு கேப்டனாக இருந்த அனுபவம் கொண்டவர். அவருக்கும் தகுதி உள்ளது, என்றார்.
The post ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் பதவிக்கு கே.எல்.ராகுல், அக்சர் பட்டேல் போட்டி appeared first on Dinakaran.