துபாய்: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இதன் காரணமாக ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.
சமீபத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. அதில் இந்தியா 3-1 என வென்றது. இந்த தொடரில் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் அவர் மூன்று ஓவர்கள் வீசினார். இதில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். அதேநேரம், தொடரின் இரண்டாவது போட்டியில், அணியின் நிலை மோசமாக இருந்தபோது, அவர் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அவர் ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினர். இதுவரை 2024ம் ஆண்டில் அவர் பங்கேற்ற டி20 சர்வதேசப் போட்டிகளில் மொத்தம் 352 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர 16 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ஹர்திக் 244 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் 2 புள்ளிகள் குறைந்து லியாம் லிவிங்ஸ்டன் 230 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 2வது இடத்தில் 231 நேபாள் வீரர் திபேந்திர சிங் ஐரி உள்ளார்.
The post ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினர் ஹர்திக் பாண்டியா appeared first on Dinakaran.