சென்னை: ‘ஐஐடி இயக்குநரா, ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரா? என வேறுபாடு தெரியாத அளவுக்கு சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் சொல்லும் செயலும் வெளிப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்க வேண்டும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மிக உயர்ந்த தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குநரான காமகோடி, கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும். இது ஐஐடி போன்ற அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் மீதும், அறிவியல் கண்ணோட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழக்க செய்யவும், மூடநம்பிக்கையை வளர்க்கவும் உதவும். ஐஐடி இயக்குநரா, ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரா என வேறுபாடு தெரியாத அளவுக்கு சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் சொல்லும் செயலும் வெளிப்பட்டு வருகிறது.