ஐ.பி.எல் வரலாற்றில் சுனில் நரைனின் மாபெரும் சாதனையை சமன் செய்த சாஹல்

2 days ago 3

முல்லன்பூர்,

ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்தார்.

கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி, பஞ்சாப் வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.1 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 16 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் திரில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அபாரமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சாஹலுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் சுனில் நரைனின் மாபெரும் சாதனை ஒன்றை சாஹல் சமன் செய்துள்ளார்.

அதாவது, ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை ஒரு போட்டியில் 4+ விக்கெட்டுகளை அதிகமுறை வீழ்த்திய வீரர் என்ற சுனில் நரைனின் (8 முறை) சாதனையை சாஹல் (8 முறை) சமன் செய்துள்ளார்.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக முறை 4+ விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்:

யுஸ்வேந்திர சாஹல் - 8 முறை

சுனில் நரைன் - 8 முறை

லசித் மலிங்கா - 7 முறை

காகிசோ ரபாடா - 6 முறை

அமித் மிஷ்ரா - 5 முறை

Read Entire Article