ஐ.பி.எல்.: மும்பை அணியின் 18 ஆண்டு கால ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போட்ட பஞ்சாப்

1 month ago 7

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. இதில் அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியை எட்டும் மற்றொரு அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

மழை காரணமாக 2¼ மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா தலா 44 ரன்கள் அடித்தனர். பஞ்சாப் தரப்பில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 204 இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுககு 207 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. பஞ்சாப் தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள் அடித்து அசத்தினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த ஆட்டத்திற்கு முன்பு வரை 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஒரு போட்டியில் கூட தோல்வியடைந்ததில்லை. அந்த அளவுக்கு பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது.

மும்பை அணியின் இந்த ஆதிக்கத்திற்கு நேற்றைய ஆட்டத்தின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதற்கு முன்னர் 18 போட்டிகளில் 200+ ரன்கள் இலக்கு நிர்ணயித்து எதிரணியை கட்டுப்படுத்தியுள்ளது. மும்பை அணியின் அந்த நீண்ட கால சாதனையை பஞ்சாப் கிங்ஸ் மாற்றியுள்ளது. 

Read Entire Article