ஐ.பி.எல். தகுதி சுற்று 2: பஞ்சாப் அணியில் சாஹல் களமிறங்குவாரா..?

1 month ago 5

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றி 2-வது தகுதி சுற்றுக்கு ஏற்றம் கண்டது.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் மணிக்கட்டு காயம் காரணமாக கடந்த 3 ஆட்டங்களை தவற விட்ட பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்த ஆட்டத்தில் களமிறங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் பயிற்சியில் ஈடுபட்ட அவர் சில ஓவர்கள் பந்துவீசி உள்ளார். இதனால் இந்த ஆட்டத்தில் அவர் இம்பேக்ட் வீரராக களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.

நடப்பு சீசனில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல் 14 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது வருகை நிச்சயம் பஞ்சாப் அணிக்கு வலுவானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

Read Entire Article