ஐ.பி.எல்: டெல்லி அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமனம்

3 months ago 21

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங் உடனான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் ஹேமங் பதானி நியம்மிக்கப்பட்டுள்ளார் .2025-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அணியின் தலைமை பயிற்சியாளராக பதானி செயல்படுவார் என்று டெல்லி நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. தமிழகத்தை சேர்ந்த 47 வயதான பதானி இந்திய அணிக்காக 4 டெஸ்ட், 40 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அத்துடன் ஏற்கனவே டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

ஐ.பி.எல்-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராக இருந்த இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதிலாக  முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 2 ஆண்டுகள் அவர் இந்த பதவியில் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article