ஐ.பி.எல்.: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு

2 days ago 3

அகமதாபாத்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது . இந்த தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.

முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இவ்விரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முந்தைய ஆட்டத்தை போலவே ரன்மழையை எதிர்பார்க்கலாம். இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. 

Read Entire Article