
சண்டிகர்,
மும்பை,இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யரும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது,
வரும் ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கவே விரும்புகிறேன்.இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என்பதை ஏற்கனவே அறிவோம். ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடத்தில் இருக்கும்.நான் அதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்த முறை அந்த நிலை குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும். பயிற்சியாளர் என்னை அங்கீகரிக்கும் வரை அந்த எண்ணில் கவனம் செலுத்தப் போகிறேன்.நான் அவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் மைதானத்திலும், வெளியேயும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் எப்படி நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.அவர் அனைவரையும் ஆதரிக்கிறார்.
கோப்பையை வெல்வதே முக்கியம். இதில் எந்த அழுத்தமும் இல்லை. இது ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.