
மும்பை,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகின்ற 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.
நடப்பு தொடரில் கொல்கத்தா அணி விளையாடிய 2 போட்டிகளில் தலா ஒரு வெற்றி, தோல்வி என 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அதேவேளை தான் விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனவே இந்த ஆட்டத்தின் மூலம் மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.